டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை: டிக் டாக் செயலியை இந்தியாவை தொடர்ந்து பல்வேறு நாடுகள் தடை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிக் டாக் செயலியின் பிறப்பிடமான சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக் டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால் அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக டிக் டாக் செயலி தங்களுடைய பயனாளர்களின் முக்கியமான தகவல்களை சீனாவிடம் கொடுக்கிறது. இதனால் அமெரிக்கா சீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி இரகசியமாகத் தகவல்களை எடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது.