
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில். அந்த வகையில் தற்போது அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அசைவம் சமைத்து சாப்பிட தடை :
தற்போது வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் இந்த விழாவானது விமர்சையாக கொண்டாடப்படும். இதனையடுத்து முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில். அத்துடன் வைகாசி விசாகதை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் வந்து இந்த வைகாசி விசாகம் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 : நாளை முதல் தொடங்குகிறது – ஆர்வத்தில் மக்கள்!
இதனையடுத்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள், அதனை நிறைவு செய்யும் விதமாக மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்வது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.