தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு. சித்திரை செல்வின்என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17 ந் தேதி சென்னை சென்று விட்டார்.
திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு
திருட்டு:
ஆசிரியரின் வீட்டை செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி வழக்கம் போல் வீட்டை பராமரிப்பு பணி செய்ய செல்வி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சென்னையில் உள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தெரிவித்தார். சென்னையில் இருந்து வந்த ஆசிரியர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1 1/2 பவுன் தங்க கம்மல், ஒரு வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!
திருடன் எழுதிய கடிதம்:
இது குறித்து போலீசில் புகார் செய்தார் ஆசிரியர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீசாரின் கண்ணில் அந்த கடிதம் சிக்கியது. அதில் “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்” என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் உள்ள கைரேகையை போலீசார் பதிவு செய்தனர். யார் இந்த மர்ம நபர் என்று போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு
புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்?