திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம்: சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம்
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில் ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. அதே போல தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னர் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து திருச்சி பேருந்து நிலையத்திற்கு வெளியே நிற்பார்த்தால் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது தனியார் சொகுசு பேருந்து அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது அனைவரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
Also Read: சென்னை சூட்கேஸில் பெண் சடலம் – மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!
மேலும் இதற்காக 4 ஏக்கர் பரப்பளவில் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் பேருந்து முனையம் அமைக்க பட இருக்கிறது. அதுமட்டுமின்றி புதிதாக கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையத்தில் 2 கழிப்பறை வளாகம், 31 கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கிறது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை