தற்போது திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் வைத்திருக்கும் பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருப்பதி :
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வழிபட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. தற்போது இது குறித்த அறிவிப்பு ஒன்றை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச தரிசன டிக்கெட் :
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் வாங்கும் பக்தர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வரிசைக்கு வர வேண்டும் என்றும்,
சென்னை தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி – கூடுதலாக 70 பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டம் !
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னதாக வரும் பக்தர்களை எக்காரணம் கொண்டும் வரிசையில் நிற்க அனுமதிக்க மாட்டோம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளளது.