Home » செய்திகள் » நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது./ அதாவது கடந்த மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக அவரது பல் இடுக்கில் பாத்திரம் விலக்கும் இரும்பு கம்பி துகள் சிக்கி இருந்தது.

மேலும் அவர் கடைசியாக டார்ச் லைட் வாங்க போனதாக கூறப்பட்ட நிலையில், அவர் வாங்கிட்டு வந்த லைட் அவரது தோட்டத்தில் தான் கிடந்தது. எனவே இதில் அவருடைய குடும்பத்தினர் சம்மந்தப்பட்டிருக்கிறாரா என்று போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இன்னும் இந்த கொலை வழக்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீஸ் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி அதிரடி ஆக்சனை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியன் 2 “பாரா” பாடல் வெளியானது – அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – Tirunelveli congress executive jayakumar death case – tamilnadu politics news – CBCIT news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top