மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தமான இடங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது சமீபத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ 4 கோடி ரொக்க விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கிடையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேரிடம் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சொந்தமான ஹோட்டல் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அவர் ஹோட்டலின் ஊழியர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில், தனக்கும் அந்த பணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நயினார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் செலவின பார்வையாளர் நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது இன்று மாலை 5 மணிக்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் இப்பொது நெல்லையில் தேர்தல் நடக்குமா.? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இதன் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.