திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கன்னியாகுமரி பகுதியில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென் பகுதிகளில் தான் அதிகமாக கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரம் வாழும் மக்களையும் கவனமாக இருக்க கூறியுள்ளது.

மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் அங்கு இருந்த தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டது. அப்போது அந்த தரை பாலத்தில் செல்ல முயற்சி செய்த டெம்போ ஆற்றுக்குள் விழுந்து மீட்பு படையினர் நீண்ட நேரத்திற்கு பிறகு டெம்போவை மீட்டெடுத்தனர்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருச்சாணி அணைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து அறிக்கை வெளியீட்டு உள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் இந்த செய்தியை கேட்ட பலரும் சோகத்தில் தான் இருந்து வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் கடலோர பகுதில் இருக்கும் மாவட்டம் முழுவதும் நேற்றும் மட்டும் நான்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. tamilnadu news – weather report today – Tiruparapu falls – kanniyakumari district – tourist place 2024 – heavy rain update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *