Breaking News: திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு: உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். பக்தர்களால் பணக்கார சாமி என்று அழைத்து வரும் திருப்பதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில், தற்போது தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு விதித்து திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. tirupati devasthanam
பொதுவாக இந்த காலத்தில் தான் வன விலங்குகள் குட்டிகளை ஈனும். அதனால் தனது குட்டிகளுக்காக இரவு நேரங்களில் வனவிலங்குகள் இரையை தேடி மலைப்பாதை வழியாக செல்லும். அதனால் அப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். tirupati
Also Read: தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம் – காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
ஆகையால் அத்தகைய சமயத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் இரண்டு சக்கர வாகனங்களில் திருப்பதி மலைப் பாதைகளில் பயணிக்கலாம் என்று தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த நாட்களில் காலை 6 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 9 மணிக்கு பின்னரோ யாரும் பயணிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு