திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. ஜூன் மாதம் நடக்க இருக்கும் சிறப்பு திருவிழாக்கள் என்னென்ன?திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. ஜூன் மாதம் நடக்க இருக்கும் சிறப்பு திருவிழாக்கள் என்னென்ன?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறையில் வெளி மாவட்டம், மாநிலம், வெளி நாடுகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டம் அதிகமாக இருந்து வருவதால் சிறப்பு டிக்கெட் வேகமாக தீர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு நாள் முழுவதும் இருந்து திருமலையான் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி கோவில் திருவிழாக்கள் 2024

இந்நிலையில் ஜூன் மாதம் நேற்று தொடங்கிய நிலையில், இம்மாதம் நடக்கவிருக்கும் சிறப்பு திருவிழாக்கள் குறித்து விவரங்களை திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதாவது திருமலையில் இருக்கும் பால ஆஞ்சநேயர் சுவாமி , ஆகாச கங்கா மற்றும் அஞ்சனாத்திரி கோவில்களில் நேற்று முதல் 5ஆம் தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று  மஹி ஜெயந்தியும் மற்றும் வருகிற ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை ஜ்யேஷ்டாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து பாலஞ்சநேயசுவாமி கோவிலில் இன்று முதல் 5ம் தேதி வரை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம் நடைபெறும்.

இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!

அதன்படி முதல் நாள் மல்லிகை அபிஷேகம், 2ம் நாள் வெற்றிலை, 3ம் நாள் கனகாம்பரம், 4ம் நாள் சமந்தி கடைசி நாள் ஜூன் 5ல் குங்குமப்பூ அபிஷேகம் நடக்க இருக்கிறது. மேலும் இந்த விசேஷ நாட்களில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஹனுமான் சாலீசா பாராயணம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை எஸ்வி இசை மற்றும் நாட்டியக் கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி பக்தர்களின் முன்னிலையில் நடக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி வருகிற ஜூன் 20ம் தேதி ஸ்ரீ நாதமுனுல வர்ஷ திரு நட்சத்திரமும் மற்றும் ஜூன் 22ம் தேதி பௌர்ணமி கருட சேவையும் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் டிக்கெட் போட்டால் சிறப்பு தரிசனம் செய்து வரலாம். Tirupati Darisanam – Tirupati devasdhanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *