திருப்பதி லட்டுக்கு வயது 308 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு 307 வயது முடிந்து 308 வது வயது ஆரம்பித்து இருக்கின்றது. திருப்பதி லட்டுகளுக்கு உரிய சிறப்புகளும் வரலாறு பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி லட்டுக்கு வயது 308 ! லட்டுக்கு முன்னாடி என்ன குடுத்தாங்க தெரியுமா !
உலகின் பணக்கார கோவில்
இந்தியாவின் முக்கிய ஆன்மிக தளங்களில் ஒன்றாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த திருப்பதி கோவில் ஏழாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு இருக்கின்றது என்று வரலாறு கூறுகின்றது. இங்கு இந்தியாவை தவிர்த்து உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருவது உண்டு. திருப்பதியில் ஒரு நாளில் லட்சகணக்கில் மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு முடி , தங்கம் , வைரம் , வெள்ளி மற்றும் பணம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஒரு நாளில் மட்டும் கோடி கணக்கில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றார்கள்.
திருப்பதி பிரசாதம் – லட்டு :
அனைத்து ஆன்மிக தளங்களிலும் பிரசாதமாக சுண்டல் , சர்க்கரை பொங்கல் , லெமன் சாதம் , தயிர் சாதம் போன்ற பல பிரசாத வகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் படி திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு வழங்கப்பட்டு வருகின்ற லட்டு பக்தர்கள் விரும்பி வாங்கி உண்ணும் பிரசாதமாக இருந்து வருகின்றது. திருப்பதி கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு லட்டு என்று திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகின்றது. ஆனால் அதிக லட்டுகள் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளும் வசதியும் இருக்கின்றது.
லட்டுகளை தயாரிப்பது யார் :
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்ற லட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தனியாக ஒரு துறை அமைத்து வழங்கி வருகின்றது. லட்டுகளை பிரசாதமாக தயாரிக்கும் பணியில் 500க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டு லட்டுகளை தயாரித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் லட்டுகள் பணியாளர்கள் மூலம் கைகளால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது லட்டுகள் மெஷின்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்குவதர்க்கு என்று ஒரு நாளில் மட்டும் 3,50,000 க்கும் அதிகமான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றது.
லட்டுகளின் வகைகள் :
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுகள் மூன்று வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முதல் வகை என்பது பக்தர்களுக்கு கவுண்டர்கள் மூலம் வழங்கப்படும் 175 கிராம் எடை கொண்ட லட்டுகள். இவைகள் 24 மணிநேரமும் பக்தர்க்ளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகின்றது. இரண்டாவது வகை 750 கிராம் எடை கொண்ட பெரிய லட்டு. மூன்றாவது வகை திருப்பதி இறைவனுக்கு நெய்வேத்தியம் படைப்பதற்கு என்று தயார் செய்யப்படும் புரோக்தம் லட்டு ஆகும். கோவில்களில் சிறப்பான நாட்களில் மட்டும் 750 கிராம் எடையுடைய லட்டு தயாரிக்கப்படுகின்றது. திருப்பதியில் லட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திக்கு ஆண்டிற்கு ரூ. 300 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்கின்றது.
லட்டுக்கு முன் என்ன பிரசாதம்
1700ம் ஆண்டு திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் 1715ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிகளுக்கு பின் லட்டு சாமிக்கு படைக்கும் நெய்வேத்தியமாக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 307 ஆண்டுகளாய் லட்டு பக்கதர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா !
308வது வயது லட்டுக்கு :
திருப்பதி லட்டுக்கு கடந்த 2015ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் திருப்பதி லட்டுகளை வெளி சந்தைகளில் விற்பனை செய்ய முடியாது. திருப்பதி லட்டு என்று கள்ள சந்தைகளில் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கத்தில் வர்த்தக முத்திரையை திருப்பதி தேவஸ்தானம் அரசிடம் இருந்து வாங்கி இருக்கின்றது. பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கடந்த 307 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் எடையின் அளவு குறைவாக இருப்பதாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
உண்டியல் காணிக்கை :
திருப்பதிக்கு உலகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. பக்தர்கள் கடவுளுக்கு அங்கிருக்கும் உண்டியல் மூலம் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவது வழக்கம். திருப்பதி கோவிலின் அதிகபட்ச ஒரு நாள் காணிக்கை 7 கோடி 68 லட்சம் ஆகும். இவை கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி உண்டியல் காணிக்கை என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வருடம் முடிவதற்குள் ஆண்டு வருமானம் சுமார் 2500 கோடி தாண்ட வாய்ப்பு உள்ளது.