பணக்கார சாமியாக இருக்கும் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி ஆன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் விசேஷ நாட்களில் அந்த கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், ஒரு அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. அதாவது, இலவச டோக்கன் வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்களில் 6 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!
தெளிவாக சொல்ல போனால், திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசனம் செய்ய, பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல நேற்று இரவு 9 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர். இதை சாதகமாக பயன்படுத்தி, அவர்கள் முண்டியடித்து செல்ல முயன்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தார். அதன்படி, கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!
இதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உட்பட 5 பெண்கள் அடங்குவர் என்று கூறப்படுகிறது. மேலும் என்னும் பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இன்று காலை 5 மணியளவில் டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்த நிலையில், தற்போது முன்கூட்டியே டோக்கன் விநியோகம் செய்யப் பட்டதன் காரணமாக தான் இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பக்தர்களின் மரணம் குறித்து நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?
தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!