Home » செய்திகள் » திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி நெரிசல் பலி ஆன குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்துள்ளார்

ஆந்திராவின் திருமலை திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி திருக்கோயில் உலக புகழ் பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நாளை ஜன. 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது பக்தர்கள் தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எனவே தரிசனம் செய்ய திருமலை திருப்பதியில் மொத்தம் 94 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. மேலும், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை தொடங்க இருந்து டிக்கெட் விநியோகம் நேற்று இரவு விநியோகம் செய்யப்பட்டது. இலவச டிக்கெட் என்பதால் அதை வாங்க மக்கள் முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில், 6 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தமிழகம் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்மணியும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த மல்லிகா குடும்பத்திற்கு  2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top