உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினசரி எக்கசக்க பேர் சென்று வருகின்றனர். குறிப்பாக பிற மாநிலங்களில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். தினசரி நாட்களை விட வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது ஏப்ரல் மாதத்தில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 தரிசன ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் ஜன.24 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.