திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தான். பணக்கார சாமி என்று எல்லாராலும் அழைக்கப்படும் திருப்பதியை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. சொல்ல போனால் நேற்று மட்டும் , 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அதுமட்டுமின்றி  3.36 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோடை விடுமுறை ஒட்டி திருப்பதி கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். குறிப்பாக டோக்கன் இல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தான் அதிக அளவில் காணப்படுவதால் 24 மணி நேரமும் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் வைகுண்டம் காம்ப்ளஸில் இருக்கும் 31 அறைகளும் தற்போது நிரம்பி வழிகிறது. கிட்டத்தட்ட 3 கி.மீ வரை வரிசை நிற்கிறது. tirupati tirumala devasthanam – accommodation at tirupati – Devotional News

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர் – இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *