திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் - இனி இது ரொம்ப  முக்கியம் - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் - இனி இது ரொம்ப  முக்கியம் - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். பணக்கார கடவுளான திருப்பதியை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட அங்கேயே தங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு தான் அங்கிருந்து திரும்புகின்றனர். tirupati balaji darshan pass

அந்த வகையில் கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட ஒரே நாளில் 65 ஆயிரத்து 134 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் உண்டியல் வருமானம் ரூ.4.27 கோடி கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவாரி கோயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. tirumala darshan booking

அதன்படி ஸ்ரீவாரி கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சக ஊழியரிடமோ அல்லது பக்தர்களிடம் பேசுவதற்கு முன்னர் “கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய” என்று கூறி விட்டு தான் தங்களது உரைகளை தொடங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று வெள்ளை வேஷ்டி அல்லது பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிய வேண்டும். Devasthanam

Also Read: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.., இனி யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் ஆயுள் காப்பீடு – விவரம் உள்ளே!

மேலும் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதி பூசிவிட்டு வேலைக்கு வரவேண்டும்.

அதே போல் பெண் ஊழியர்கள் சனிக்கிழமை அன்று வெள்ளை சுடிதார் அல்லது  வெள்ளை சேலை அணிய வேண்டும்.

மேலும் நெற்றியில் குங்குமம் விபூதி பூசி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. tirupati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *