திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து. இந்தியாவில் அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடும் கோவிலாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி. மேலும் பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்துவதன் காரணமாக திருப்பதி கோவிலானது செல்வ செழிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருப்பதியில் VIP தரிசனம் ரத்து :
கோடை விடுமுறையையொட்டி திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பத்திற்காக வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயற்று கிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்ப்படுவதாக திருப்பதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் – உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !
மேலும் VIP தரிசனம் ரத்து செய்ப்பட்ட நிலையில் எந்த வித பரிந்துரை கடிதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.