இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பழங்குடியை சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஸ்ரீபதி (23). இவர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கு தொடர்ந்து படித்து வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த தேர்வுக்காக தன்னை தயார் படுத்தி இவர் அப்போது கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு தேர்வு தேதியும் பிரசவ தேதியும், ஒரே நாளில் வந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தேர்வுக்கு முதல் நாளே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அடுத்த நாள் தனது கணவர் உதவியுடன் தேர்வை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை ஸ்ரீபதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.