உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் தரிசன டிக்கெட் வழங்குவது வழக்கம். அதே போல 2024 ல் நடக்க இருக்கிறது. கோவிலில் தினமும் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் இந்த கோவிலில் சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம் உள்ளது.
திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட் 2024 – ஆன்லைனில் எப்படி பெறுவது தெரியுமா?
மேலும் இந்த மலையின் 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரர் அருளை பெறுகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் திருவிழா கோலமாக தென்பட்டாலும், கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இன்றைய ராசிபலன் (நவம்பர் 21 – வியாழன்) – இந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் தொடங்கும்!
அதுமட்டுமின்றி இத்திருவிழா மொத்தமாக 17 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, கோவிலுக்குள் பக்தர்கள் முன் பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்படும். எனவே ஆன்லைனில் புக் செய்ய,
Click Here: https://annamalaiyar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20343
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?
விநாயகரை வழிபட 51 மந்திரங்கள் ! மந்திரத்தின் பலன்கள் !