நேற்று இரவு நடந்த திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் குறித்து தற்போது முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மண்சரிவு:
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பல்வேறு பகுதியில் பல சேதங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. அப்போது, சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று, 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் உள்ள 2 வீடுகளில் விழுந்ததில் சேதமடைந்துள்ளன.
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
மேலும் இந்த இடிபாடுகளில் ஒரு சிறுமி உட்பட 7 பேர் சிக்கியுள்ளனர். அதன்படி, மண் சரிவால் மண்ணில் புதைந்துள்ள வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியிலும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
மேலும் மண் சரிவு ஏற்பட்டு 20 மணி நேரத்தை கடந்து, இன்னும் அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தற்போது மண்ணில் புதைந்த 7 பேரில் இரண்டு பேரின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் மற்றவர்களின் உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்