112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு: இந்த உலகில் எத்தனையோ கடல் விபத்துகளை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அதில் ஒரு சில கடல் விபத்து மட்டும் நம்மால் இப்பொழுது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வரும். அதில் ஒன்று தான் டைட்டானிக் விபத்து. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் கடலில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற கப்பல் பனிப்பாறையில் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது.
112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு
அந்த கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் 3 மணி நேரத்தில் மூழ்கியது. இந்த கோர சம்பவத்தில் 1500 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தான் இப்பொழுது வரை யாராலும் மறக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து பலரும் படமாக எடுத்தனர். ஆனால் 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் இப்பொழுது வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
மேலும் டைட்டானிக் கப்பல் குறித்தும் பல ஆராய்ச்சிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலுக்குள் மூழ்கிய அந்த கப்பலை இப்பொழுது வரை தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து அரங்கேறி போது வெளியான செய்தித்தாள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Also Read: தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்? அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!
அதாவது கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி The Daily Mirror நிறுவனம் வெளியிட்ட செய்தித்தாள் தான் தற்போது 112 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தின் லிச்ஃபீல்ட் நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டின் அலமாரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி தாளில் டைட்டானிக் கப்பலில் இருந்து உயிர் பிழைத்த உயிர்பிழைத்தவர்களின் பெயர் பட்டியல் சவுத்ஹாம்டன் நகரில் உள்ள ஒரு சுவரில் ஒட்டுவதற்காக காத்திருக்கும் இரு பெண்களை காட்டுகிறது. titanic newspaper
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு