தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி TMB வங்கி வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமை இடமாகக்கொண்டு 1921ம் ஆண்டு முதல் வங்கி சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த வங்கியில் Chief Risk Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TMB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
TMB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது … நேர்காணல் மட்டுமே !
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ( TMB வங்கியில் ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
Chief Risk Officer – CRO ( தலைமை இடர் அதிகாரி ) பணியிடங்கள் TMB வங்கியில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
பட்டய நிதி ஆய்வாளர் ( CFA ) , பட்டய கணக்காளர் ( CA ) முடித்தவர்கள் Chief Risk Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயதுத்தகுதி :
60 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் TMB வங்கியில் காலியாக இருக்கும் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு 2023
மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
அனுபவம் :
கிரெடிட் , தலைமை இடர் அதிகாரி , உதவி மேலாளர் பணிகளில் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது தலைமை இடர் அதிகாரி பணிகளில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி ஊதியமானது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே இருக்கும் இணையதள லிங்க் பயன்படுத்தி TMB வங்கியில் காலியாக இருக்கும் CRO பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
26.10.2023 முதல் 09.11.2023 வரையில் Chief Risk Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்க தேவையானவை :
1. கல்வி சான்றிதழ்
2. அனுபவ சான்றிதழ்
3. நிவாரண கடிதம்
4. கடைசி மாத சம்பள விவரம்
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் TMB வங்கியில் காலியாக இருக்கும் Chief Risk Officer பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நிரப்பப்படுவர். நேர்காணலானது நேரடியாகவோ அல்லது வீடியோ கால் மூலமாகவோ நடைபெறும்.