TMB வங்கி DGM ஆட்சேர்ப்பு 2024TMB வங்கி DGM ஆட்சேர்ப்பு 2024

TMB வங்கி DGM ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட், பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இதன் தொழில்நுட்பத் துறையில் துணை பொது மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கியின் தொழில்நுட்ப துறைக்கான அணைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடும் பதவியாகும். காலியிடத்தை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET BANK JOBS

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (Tamilnad Mercantile Bank TMB)

வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் பணியமர்த்தப்படுவர்

பிரதி பொது முகாமையாளர் தகவல் தொழில்நுட்பத் துறை
(Deputy General Manager for Information Technology Department)

கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப துறையில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், முக்கிய வங்கி சூழலில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

SBI SCO Recruitment 2024 ! 78,230 சம்பளத்தில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, விண்ணப்பிக்கலாம் வாங்க !

பொது / தனியார் துறை திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் உதவி பொது மேலாளர் அல்லது தனியார் துறை வணிக வங்கிகளில் சமமான கேடர், உடன் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 45

அதிகபட்ச வயது – 55

வங்கியின் புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ் நிரநயிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
பணிக்கு விண்ணப்பிக்கAPPLY NOW

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் (TMB) என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய வங்கியாகும். TMB 1921 இல் நாடார் வங்கியாக நிறுவப்பட்டது, ஆனால் அதன் பெயரை நாடார் சமூகத்திற்கு அப்பால் விரிவுபடுத்துவதற்காக நவம்பர் 1962 இல் அதன் பெயரை தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி என்று மாற்றியது. வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகள், 12 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இரண்டு இணைப்பு அலுவலகங்கள், இரண்டு மத்திய செயலாக்க மையங்கள், ஒரு சேவை கிளை, நான்கு நாணய பெட்டிகள், 48 eLobby மையங்கள், 262 பண மறுசுழற்சி இயந்திரங்கள் மற்றும் 1151 தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் கொண்டுள்ளது.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *