TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - அரியலூர் மாவட்டம்  முதலிடம்!!TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - அரியலூர் மாவட்டம்  முதலிடம்!!

TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 2023-2024 ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பேப்பர் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த தேர்வில் கைதட்ட 8 லட்சத்துக்கு மேலான மாணவர்கள் எழுதினார்கள். இதில் தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் அடங்கும். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்தையும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தான் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடம் வாரியாக தேர்ச்சி விகிதத்தை பிரித்தால், தமிழ் பாடத்தில் 96.85%, ஆங்கிலத்தில்  99.15%, கணிதத்தில் 96.78%, அறிவியலில்  96.72%, சமூக அறிவியலில்  95.74% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை – கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *