தற்போது தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுக விழாவில் TN 37 DR 1111 அபராதம் கட்டாத இனோவா கிரிஸ்டா காரில் வந்த விஜய், மேலும் அவர் பயணம் செய்த காருக்கு தற்போது வரை ரூ.4500 வரை அபராத தொகை நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
TN 37 DR 1111 அபராதம் கட்டாத இனோவா கிரிஸ்டா காரில் வந்த விஜய்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுக விழா :
நடிகர் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அதன் முக்கிய நிகழ்வான கட்சியின் கொடி மற்றும் அதிகாரபூர்வ பாடலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியினை ஏற்றி பாடலை அறிமுகம் செய்தார். Tamilaga Vetri Kazhagam party song release
இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியயோர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
விஜய்யின் தவெக கொடிக்கு வந்த புதிய சிக்கல் – சர்ச்சையாக்கப்படும் யானை, வாகை மலர் – அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா !
அபராதம் கட்டாத காரில் வந்த விஜய் :
தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுக விழாவிற்கு விஜய் பயணித்த வந்த TN 37 DR 1111 என்ற காருக்கு ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் TN 37 DR 1111 என்ற எண்ணை கொண்ட கார் பல்வேறு விதி முறைகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தமாக சேர்த்து ரூ.4700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடைசியாக விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.200 மட்டுமே செலுத்தியுள்ள நிலையில் ரூ.4500 அபராத தொகை நிலுவையில் உள்ளது.
அத்துடன் சம்மந்தப்பட்ட TN 37 DR 1111 என்ற டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுயள்ளது.