தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழகத்தில் வாழும் ஏழை மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அரசு நியாய விலை கடை மூலம் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் முதல் சலுகைகள் வரை ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 34,793 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதனை தொடர்ந்து இன்று வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. tamilnadu ration card holders
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,” பொதுவாக ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் இறுதி நாள் அன்று பொருட்கள் விநியோகிக்கப்படாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
ஆனால் ஆகஸ்ட் 31ம் தேதி இறுதி நாளான இன்று ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. tn all ration shops
Also Read: குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் – வரலாறு காணாத மழையால் 26 பேர் உயிரிழப்பு!!
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் ஆகஸ்ட் மாதம் வாங்காத பொருட்களை இன்று வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் அனைத்து கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?