தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 ! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 2024. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முடிவுற்று தற்போது மே மாதம் 6 ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 97.45 % தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 90.47% தேர்ச்சி சதவீதம் பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையத்தளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டபடிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2024 ! இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் !

மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment