தமிழகத்தில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இருக்கை பக்கத்தில் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை இருப்பது மரபாக இருக்கிறது. இப்படி இருக்கையில் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தற்போது வரை இருக்கை ஒதுக்கப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை மறுபரிசீலனை முக ஸ்டாலின் கேட்டுக் கொண்ட படி, இன்று நடக்க இருந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2வது வரிசையில் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவர் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தொடரில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.