பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு.. அரசு அதிரடி அறிவிப்பு - உடனே முந்துங்கள்!!பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு.. அரசு அதிரடி அறிவிப்பு - உடனே முந்துங்கள்!!

TN Birth Certificate Registration Extension: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு: பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் சார்பாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுவது வழக்கம். மேலும்  ஒரு சில சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில பேர் குழந்தையின் பெயரை பதிவு செய்யாமல் சான்றிதழை வாங்கி செல்கின்றனர்.

இதனால் இப்பொழுது சிக்கல் ஏற்படாது. ஆனால் பிற்காலத்தில் கண்டிப்பாக ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். அப்படி பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். இது குறித்து பிறப்பு-இறப்பு பதிவாளர் செல்வ விநாயகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களில் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் 2 மாதங்களுக்குப் பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். மேலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய முடியாது. tamilnadu government

Also Read: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இருப்பவர்கள் வருகிற டிசம்பர் 31தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31ம் தேதிக்குள் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் என  பிறப்பு-இறப்பு பதிவாளர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். Birth Certificate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *