தங்கம் விலை – 1 கிராம் 7000 ரூபாயா: இல்லத்தரசிகள் ஷாக்!: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தங்கம் மீது அதிகம் நாட்டம் வைத்துள்ளனர். குறிப்பாக பணக்கார வீட்டு பெண்கள் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வரை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். ஆனால் ஏழை எளிய பெண்கள் எப்படியாவது ஒரு பவன் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று அயராமல் உழைத்து வருகின்றனர்.
தங்கம் விலை – 1 கிராம்
ஆனால் அவர்களை ஏமாற்றும் விதமாக தங்கத்தின் விலை தினசரி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு சில நாள் தங்கம் விலை சரிவை சந்தித்தாலும் கூட அடுத்த ஓரிரு நாட்களில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விடுகிறது.
மேலும் சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தான் தங்கத்தின் விலை தீர்மானம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.24) விலை எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது.
Also Read: மாணவர்களுக்கு ஜாக்பாட் – அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?
அதாவது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,000 -க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு, கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனையாகிறது. இப்படி தங்கம் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?