சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இதுவரை 11 பேரை கைது செய்து காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் புதிய சென்னை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதற்கான ஆணையை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை மாநகர காவல் துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் புதிய சென்னை மாநகர காவல் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னையின் 110 ஆவது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், காவல் துறையின் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அது போல் அருண் ஐபிஎஸ்க்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *