2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்: பொதுவாக சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்த அவசர உலகத்தில் மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போன்றவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம், சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் காற்று மாசுபடுவதும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே இதனை கட்டுபடுத்த, தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
அதாவது, வாகனங்களால் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக 500 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்திற்காக OHM Global Mobility Private Ltd நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் – 4 பேர் பலி – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
இந்த பேருந்துகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 180 கி மீ வரை செல்ல இயலும். 12 மீட்டர் நீளமுள்ள இந்த தாழ்தள மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 2025 ஆம் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்