புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 தற்போது கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சிதம்பரம் நடராஜர் கோவில் :
சிவ பகதர்கள் அதிகம் சென்று வழிபடும் புகழ்பெற்ற ஆன்மிக தளங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜன் கோவிலாகும்.
மேலும் இங்கு அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் சிலையானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
தற்போது அயல்நாட்டு விஞ்ஞானிகளும் நடராஜரின் பெருவிரலானது உலகின் காந்த மின்புலத்தின் மைய மையமாகக் கொண்டுள்ளது என்று நிரூபித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடம் உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது என்றும் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம் (COSMIC DANCE) என்று பல ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்ற பஞ்ச பூத அம்சங்களில், தில்லை நடராஜர் ஆலயம் வானைக் குறிக்கிறது என்பது உறுதி செய்யபட்டுள்ளது.
ஆனி திருமஞ்சன விழா :
அந்த வகையில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆனி மாத திருமஞ்சன விழா புகழ் பெற்றதாகும். மேலும் மார்கழி மாத திருவாதிரைக்கு பிறகு, சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது இந்த ஆனி திருமஞ்சன விழாவாகும்.
இதனை தொடர்ந்து ஆனி திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமான், சிவகாம சுந்தரி அம்மையுடன் ஆனந்த திருநடனம் ஆடி தேவர்களுக்கும், பதஞ்சலி முனிவருக்கும் திருக்காட்சி அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இந்த நாளில் தேவர்கள், சிதம்பரம் நடராஜருக்கு பூஜைகள் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
இதனையடுத்து ஆனி மாதம் உத்திரத்தில் சிதம்பரம் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேகத்தையே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.
நாட்டில் விவசாயம் செழிப்பதற்காகவும், மக்கள் அனைவருக்கும் வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விழாவானது நடத்தப்படுகிறது.
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருமஞ்சன விழா நாளில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருத்தேரோட்டம் நடத்தப்படும். இந்த திருத்தேரோட்டத்தினை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
அந்த வகையில் இந்த ஆண்டு திருதேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும், ஆனி திருமஞ்சனம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. .