கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் :
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் போன்ற பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாராய குற்றவாளிகள் அனைவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்தம் :
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையிலெடுத்த நிலையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம்.இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
வோடபோன் ரீசார்ஜ் விலை உயர்வு – ஸ்மார்ட்போன் யூசர்கள் தலையில் இடியை இறக்கிய நிறுவனம்!
மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.