டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் - 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் - 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !

தற்போது டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களை உற்பத்தி ஆலைக்கு வரும் செப். 28 ந்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. இதன் அடிப்படையில் indபனப்பாக்கத்தில் அமைய உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையின் மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளில் இன்று முதல் புதிய விதி அமல் – பணம் செலுத்துதல் கழகம் அறிவிப்பு !

இதனை தொடர்ந்து பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *