தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் ? செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாற்றம் செய்யப்படுவதன் மூலம் மூன்று புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக அமைச்சரவையில் மாற்றம் :
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மூன்று மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதால் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி :
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்வராக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய் – ஆரவாரத்துடன் வரவேற்ற நிர்வாகிகள்!
இதனை தொடர்ந்து அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதக்கது.