தற்போது சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு நிகழ்வை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-10-24) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலைஞர் நூற்றாண்டு பூங்கா :
கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில் சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள சுமார் 6.09 ஏக்கர் பரப்பளவில் 46 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில் பூங்கா அமைப்பதிற்கான ஒட்டு மொத்த பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். TN CM Stalin to inaugurate Kalaignar Centenary Park in Chennai on October 7 2024
பூங்காவின் அமைப்பு :
அந்த வகையில் சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவானது,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
93 ஆண்டுகளாக ஒலிபரப்பாகும் ரேடியோ நிகழ்ச்சி? அப்படி என்ன வானொலி தெரியுமா?
மேலும் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஜிப்லைன் மற்றும் பனிமூட்டப்பாதை உள்ளிட்டவை கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இடம்பிடித்துள்ளன. Kalaignar Centenary Park in Chennai
இந்த சூழ்நிலையில் பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-10-24) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.