திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் - முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம் !திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் - முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம் !

தவெக கட்சியின் மாநாட்டில் விஜய் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் தற்போது எழுதப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, நேற்று தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். tn congress write letter to dmk asks for power sharing tvk vijay calls for alliance

மேலும் அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் வழிகாட்டிகள், கொள்கை ரீதியான எதிரிகள்,

வழிகாட்டியாக முன்னெடுக்கும் தலைவர்கள், கட்சி பெயர் மற்றும் கொடிக்கான விளக்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தவெக உடன் கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் பல்வேறு கட்சிகள் இதற்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று ஆட்சியில் பங்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் தற்போது எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நன்றாக இருக்கும்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.

அதிலும் குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

இதனனையடுத்த விஜய், இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் இருந்து தமிழக முதல்வருக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *