கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் - சிறுவாணி மலைக்கு மாற்றம் - வனத்துறை அறிவிப்பு !கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் - சிறுவாணி மலைக்கு மாற்றம் - வனத்துறை அறிவிப்பு !

தற்போது கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி மலை பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.latest tamil news

கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி வன உயிரியல் பூங்காவுக்கான உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது.Siruvani Hills forest trekking

இதனையடுத்து உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் சென்று விட சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர் ஆணை பிறப்பித்தனர்.

அத்துடன் கோவை வஉசி உயிரியல் பூங்காவில் உள்ள அட்டவணை வன உயிரினங்களை வனத்திற்கு மாற்றம் செய்திட தமிழக வனத்துறையால் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்கள் கடந்த மே மாதம் வனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்களை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டதை தொடர்ந்து மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு, coimbatore voc park

தற்போது கூடுதலாக பச்சை தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகள் தரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் – சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலம்பட்டி வன பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில்,

5 கடமான்கள் பிரத்யேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் இன்று விடுவிக்கப்பட்டது.

அத்துடன் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.tn Forest Department

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *