சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஸ்மார்ட்போன் திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு:
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே இந்த திட்டத்தை சேர இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, UDID அட்டை ஆதார் அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ், இளங்கலை கல்வி/முதுகலை கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் என அதற்கான சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் கொண்டு வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!
மேலும் ‘இ – சேவை’ மையத்தின் முலமாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற வெப் சைட்க்குள் சென்று தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்