தமிழகத்தில் உள்ள கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை :
தமிழ்நாட்டில் கிராமங்களில் மக்கள் உணவுப்பொருட்களை எளிதாக பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் 5000 மேல்நிலை நீர்நிலைத்தேக்கதொட்டிகளில் இணையம் மூலம் தானியங்கி ஆன் / ஆப் செய்யப்படும் இயக்க அமைப்பு நிறுவப்படும் என்றும், மேலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் – மரண பீதியில் மக்கள் !
மேலும் இது போன்ற திட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.