முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். ராணுவ வீரர் முதல் அரசு தொடர்பாக வேலை செய்யும் அனைவர்க்கும் அரசு சார்பாக ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் விண்ணப்பிக்க தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை கீழே பார்க்கலாம்.
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்
விண்ணப்பிக்க தகுதி: முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெற வேண்டும் என்றால் நீங்கள் சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிக்க வேண்டும் அல்லது அந்த போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30ம் தேதி (30.09.2024) மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Also Read: வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
வயது வரம்பு: 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் Link: www.sdat.tn.gov.in
மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ. ரயில்வே ரோடு, தென்காசி என்ற அலுவலக முகவரி-யிலோ அல்லது 04633 212 580 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டியது கட்டாயம். ex athletes rs 6000 per month scholarship
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை