பட்டய கணக்காளர் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி 2024 மூலம் தகுதியான மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டய கணக்காளர் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பட்டய கணக்காளர் தேர்வு பயிற்சி :
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் சார்ந்தவர்களுக்கு,
பட்டய கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate)
நிறுவன செயலாளர் – இடைநிலை (Company Secretary – Intermediate)
செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை (Cost and Management Accountant – Intermediate )
போன்ற போட்டி தேர்வில் தேர்ச்சி பெற சென்னையில் உள்ள முன்னணி பயிற்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தாட்க்கோவில் 100 ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அடிப்படை தகுதிகள் :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் இருக்க வேண்டும்
ஒரு வருட பயிற்ச்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து கொள்ளலாம்.