உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து போன்றவற்றிக்கு நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களை சென்றடைய ஏதுவாக இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலானது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் பணியின் போது மரணமடையும் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சமூக விரோத தாக்குதலால் மரணம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு,

வேறு காரணங்களால் மரணம் அடைந்தால் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்வு

உடல் உறுப்புகளில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீட்டு தொகையாக ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.7.50 லட்சமாக உயர்வு

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு தகவல் இதோ !

மேலும் சிறிய காயம் அடைந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.10000 த்திலிருந்து ரூ.40000 மாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *