தற்போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு அரசு :
தமிழக அரசின் 50 வது புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கான அறிவிப்புகளை அவ்வப்போது தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தலைமைச்செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் மாற்றம் :
தற்போது வரை தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த முருகானந்தம் தமிழக அரசின் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். அத்துடன் திருநெல்வேலி சாராட்சியாக பணியைத் தொடங்கிய முருகானந்தம், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து 2022ல் தமிழ்நாடு நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.