
தற்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024
ஆதிதிராவிடர் விடுதிகள் :
தற்போது அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கென 22 தாங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ / மாணவியர் விடுதிகள், 7 கல்லூரி மாணவர்கள் விடுதிகள், 3 கல்லூரி மாணவியர் விடுதிகள், மேலும் முதுகலை மாணவ / மாணவியர் விடுதி, ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதி போன்றவைகள் அடங்கும்
அடிப்படை தகுதி :
பள்ளி விடுதிகளில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள்.
சலுகைகள் :
பயிலும் மாணாக்கர்களுக்கு எந்தவொரு செலவினமும் இல்லாமல் உணவும் தாங்கும் இடமும் வழங்கப்படும். அத்துடன் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடையும், சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேலும் ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர விரும்பும் மாணாக்கர்கள் சம்மந்தப்பட்ட ஆதிதிராவிடர் விடுதிகளில் உள்ள காப்பாளர்களிடம் விண்ணப்பபடிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் – அட்ராசக்க!
அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ .2.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி ;
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 09.07.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CLICK HERE |
குறிப்பு :
அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் இச்சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்