அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் –  58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் பிறகு உதவி பேராசிரியர் தேர்வு நடைபெறும் தேதி பிறகு தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *