இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ். தமிழக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவர்கள் கடந்த ஆண்டின் பஸ் பாஸையே பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் :
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024 ஆம் கல்வியாண்டிற்கான ஜுன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் மாணவர்கள் புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை கடந்த ஆண்டின் பஸ் பாஸையே பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – தலைமை ஹாஜி அறிவிப்பு !
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டையினை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.