வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம்.

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை

இரண்டு ஆண்டு தொழில்நுட்ப பிரிவுகள்,

சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட்

ட்ராப்ட்ஸ் மேன் சிவில் மற்றும் ட்ராப்ட்ஸ் மேன் மெக்கானிகல்

டர்னர், லிப்ட் மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட், ஏசி மெக்கானிக்

மெக்கானிக் மின்சார வாகனம்,

அடிப்படை வடிவமைப்பாளர் & மெய்நிகர் சரிபார்ப்பு (மெக்கானிக்கல்)

மேம்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்

ஓராண்டு தொழில்நுட்ப பிரிவுகள்,

தொழில்துறை ரோபாட்டிக்ஸ் & டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்

இன்டிரியர் டெக்கரேஷன் மற்றும் டிசைன், வெல்டர், பிளம்பர்

ட்ரோன் பைலட்

மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விலையில்லா பாடப்புத்தகம், வரைபடக்கருவி, சீருடை, விலையில்லா பஸ் பாஸ், காலனி போன்றவை வழங்கப்படும்,

அத்துடன் பயிற்சியில் சேர்பவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது, மேலும் விடுதியில் தங்கி படிக்கும் வசதியும் உண்டு.

தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு மற்றும் இரண்டு தொழிற்பயிற்சி பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது

நேரடி மாணவர் சேர்க்கைக்கு துணை இயக்குனர் / முதல்வர், வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024.

அதிகாரபூர்வ அறிவிப்புclick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *