தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் தகுதியான பெண்களுக்கு தையல் மெஷின் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச தையல் இயந்திரம்
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி கடந்த 2021 ஆண்டு ஆட்சியை அமைத்ததில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தொடங்கி திருமண உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம், கணவனை இழந்த மற்றும் கைம் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம், விதவை மறு திருமண உதவி திட்டம் என தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை தற்போது தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெண்கள் யாரையும் நம்பாமல் தங்களது சொந்த காலில் நிற்க தான் இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். எனவே இந்த திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து பார்க்கலாம்.
Also Read: தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா? வெளியான அதிரடி அறிவிப்பு!!
தேவைப்படும் ஆவணங்கள்:
- விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- மேலும் தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
- அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர்கள் ஆண்டு வருமானமாக 72 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
விண்ணப்பிப்பது எப்படி.?
இந்தத் திட்டத்தின் கீழ் சேர இ சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற வெப் சைட் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?